×

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் விரைவாக செய்ய வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்

தஞ்சை : தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காமாட்சிபுரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு விவசாயிகளிடம் விரைவாக நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

திருப்பனந்தாள் ஒன்றியம், குறிச்சி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் மதியழகன் என்பவர்குறுவை சாகுபடி செய்வதற்கு அவர்களுடைய சொந்த நிலத்திற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் விதைகள், ரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படும் உரக்கிடங்கிணை ஆய்வு செய்து கிடங்கில் ரசாயன உரங்களின் இருப்பு குறித்தும், அதனை பதிவேடுகள் மூலம் முறையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா என்று அலுவலரிடம் கேட்டறிந்து விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தங்குதடையின்றி விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் எனறு அறிவுறுத்தினார்.

அதனருகில் செயல்பட்டு வந்த குறிச்சி நியாய விலை கடையினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்க கூடிய அரசின் தரத்தையும், மேலும் பதிவேட்டில் உள்ள இருப்பு முழுமையாக உள்ளதா என மூட்டைகளை எண்ணிப்பார்த்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பந்தநல்லூர்ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் துறையூர்மெயின் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, பணியினை விரைவாக முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

காமாட்சிபுரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு விவசாயிகளிடம் விரைவாக நெல் கொள்முதல் செய்திட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது வேளாண் உதவி இயக்குனர் முகமது பாரூக், தாசில்தார் சந்தானம் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ராஜு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Thiruppanandal Union Procurement ,Procurement , Tanjore: Collector Dinesh Bonraj Oliver has been tasked with developing projects in the areas under the Tanjore District Thiruppanandal Union.
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...